×

11 மாநில சட்டமன்ற இடைத்தேர்தலின் தற்போதைய நிலவரம்: 6 மாநிலங்களில் பாஜக- 2 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை.!!!

டெல்லி: நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதனைபோல், மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் பீகார்  மாநிலத்தில் ஒரு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 131 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும், மத்திய பிரதேசம் உத்திரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, தெலுங்கானா, மணிப்பூர், உள்ளிட்ட மாநில இடைத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஹரியானா, சத்தீஸ்கர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. 3 மாநிலங்களில் மாநில கட்சி முன்னுலையில் உள்ளது.

மத்திய பிரதேச இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்:

* பாரதிய ஜனதா கட்சி- 1 வெற்றி; 19 இடங்களில் முன்னிலை.
* காங்கிரஸ் கட்சி    -  7 இடங்களில் முன்னிலை.
* பகுஜன் சமாஜ் கட்சி-  1 இடங்களில் முன்னிலை.
* மொத்தம் 28 தொகுதி

குஜராத் இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்:

* பாரதிய ஜனதா கட்சி-  3வெற்றி; 5 இடங்களில் முன்னிலை.
* காங்கிரஸ் கட்சி    -  0 இடங்களில் முன்னிலை.
* மொத்தம் 8 தொகுதி.

உத்திரப்பிரதேச இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்:

* பாரதிய ஜனதா கட்சி-  6 இடங்களில் முன்னிலை.
* சமாஜ்வாதி கட்சி    -  1 இடங்களில் முன்னிலை.
* மொத்தம் 7 தொகுதி.

மணிப்பூர் இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்:

* பாரதிய ஜனதா கட்சி-  3 இடத்தில் வெற்றி 1 இடங்களில் முன்னிலை.   
* சுயேச்சை வேட்பாளர்  -  1 இடத்தில் வெற்றி .
* மொத்தம் 5 தொகுதி.

கர்நாடகா இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்:

* பாரதிய ஜனதா கட்சி-  2 இடங்களில் முன்னிலை.
* மொத்தம் 2 தொகுதி.

ஒடிசா இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்:

* பிஜு ஜனதா தளம் கட்சி - 2 இடங்களில் முன்னிலை.
* மொத்தம் 2 தொகுதி.

நாகலாந்து இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்:

* தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி 1 இடங்களில் முன்னிலை.
* சுயேச்சை வேட்பாளர்  -  1 இடங்களில் முன்னிலை.
* மொத்தம் 2 தொகுதி.

ஜார்கண்ட் இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்:

* ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-  1 இடங்களில் முன்னிலை.
* காங்கிரஸ்          -   1 இடங்களில் முன்னிலை.
* மொத்தம் 2 தொகுதி.

தெலுங்கானா இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்:

* பாரதிய ஜனதா கட்சி-  1 இடங்களில் முன்னிலை.
* மொத்தம் 1 தொகுதி.

ஹரியானா இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்:

* காங்கிரஸ் -   1 இடங்களில் முன்னிலை.
* மொத்தம் 1 தொகுதி.

சத்தீஸ்கர் இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்:

* காங்கிரஸ் -   1 இடங்களில் முன்னிலை.
* மொத்தம் 1 தொகுதி.

பீகார் நாடாளுமன்ற இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்:

* ஐக்கிய ஜனதா தளம் - 1 இடங்களில் முன்னிலை.
* மொத்தம் 1 தொகுதி.

Tags : state assembly ,states ,elections ,BJP ,Congress , Current situation of 11 state assembly by-elections: BJP in 6 states- Congress leads in 2 states !!!
× RELATED மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்!...